செய்திகள்

சுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து - கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty

மாலை மலர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.