செய்திகள்

பா.ஜ.க. ஆதரவு முதலாளிகளுக்காக எருமைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

பா.ஜ.க. ஆதரவு முதலாளிகளுக்காக கால்நடை விற்பனை கட்டுப்பாடுகளில் எருமை மாடுகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிடுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதற்கும், கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விஷயத்திலும் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.