மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்களான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி (ஓய்வு), மனோஜ் காரத் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை விபரங்களை சீலிட்ட உறையில் வைத்து கோர்ட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இணை விசாரணை அமைப்பை உருவாக்குவதுபோல் அமைந்து விடும் என்று மறுப்பு தெரிவித்தார்.