செய்திகள்

மத்திய திட்டங்களின் பெயரை மாற்றினால் அதற்கான நிதி நிறுத்தப்படும்: மத்திய மந்திரி மிரட்டல்

மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றி வைத்தால், அதற்கான நிதி நிறுத்தப்படும் என மத்திய மந்திரி ராம் கிருபால் யாதவ் மிரட்டல் விடுத்துள்ளார்.

மாலை மலர்

கோல்கட்டா:

மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி ராம் கிருபால் யாதவ் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, மேற்கு வங்க அரசு வேறு பெயர்களை வைத்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.

விசாரணையில் அந்த புகார்கள் உண்மை என தெரிய வந்தால், அந்த திட்டத்துக்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.