செய்திகள்

நதிநீர் பிரச்சனைகளுக்கு தேசிய அளவில் ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு திட்டம்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார். #ArjunRamMeghwal #SingleTribunal #resolvewaterdisputes

மாலை மலர்

மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கொல்கத்தாவில் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெஹ்வால் நேற்று முன்தினம் கூட்டினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது காவிரி, நர்மதா, கிருஷ்ணா மற்றும் நாட்டில் உள்ள இதர ஆறுகளின் நீர் பங்கீடு பிரச்சனைக்கு தனி தனி தீர்ப்பாயங்கள் உள்ளன.

இவ்வாறு பல தீர்ப்பாயங்கள் இருப்பதற்கு பதில், தேசிய அளவில் ஒரே தீர்ப்பாயம் அமைக்க, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனை சட்ட திருத்த மசோதாவில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு முறையான நீர்ப்பாசன வசதிகள் கிடைக்க இந்த ஒற்றை தீர்ப்பாயம் உதவும். நீர் என்பது தேசிய சொத்து. அதனால் மாநிலங்கள் மட்டும் அல்லாமல், நாட்டு நலனும் இதில் அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.