செய்திகள்

பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.