தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை... என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துஉள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
''பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.