செய்திகள்

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்காக ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாகம்

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ராமேசுவரம் கோவிலுக்கு இன்று அதிகாலை சென்று ஸ்படிகலிங்க பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். பின்னர் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் அவர் நீராடினார்.

மாலை மலர்

ராமேசுவரம்:

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி, ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக வரும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் பா.ஜனதா தான் காரணம் என சொல்வது வேடிக்கையாக உள்ளது. டி.டி.வி. தினகரன் நல்ல ஜோசியராகலாம். அவர் அப்படித்தான் பேசி வருகிறார்.

ராமேசுவரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க, இந்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இலங்கை அரசு தான் அமைதியாக உள்ளது. அவர்கள் அனுமதித்தால் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக ராமேசுவரத்திற்கு படகு போக்குவரத்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராம், மாநிலச் செயலாளர் பாலகணபதி, மாவட்டத்தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மகார்த்தி, கோட்டச் செயலாளர் சண்முகராஜன், நகர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் கட்சியினர் பேட்டியின் போது உடனிருந்தனர். #BJP #PonRadhakrishnan