செய்திகள்

அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு 2-ம் கட்ட ஒதுக்கீடு - சென்டாக் அறிவிப்பு

புதுவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான 2-ம் கட்ட ஒதுக்கீட்டு இடங்களை சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கணினி முறையாக முதல் கட்ட ஒதுக்கீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்டாக் நிர்வாகம் 2-ம் கட்ட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. அரசு இடஒதுக்கீடு வருமாறு:-

இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில், காலியிடம்-3, ஒதுக்கப்பட்ட இடம் 3, பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் காலியிடம்-25, ஒதுக்கப்பட்ட இடம்-19, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடம்-37, ஒதுக்கப்பட்ட இடம்-31, வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் காலியிடம்-19, ஒதுக்கப்பட்ட இடம்-11.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்களுக்கான ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்த இடங்கள் 25-ல் ஒதுக்கப்பட்ட இடம்-2, காலியிடங்கள்-23, மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் உள்ள 37 இடங்களில் 31 இடங்கள் ஒதுக்கப்பட்டு 6 இடங்கள் காலியாக உள்ளன.

வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் 19 இடங்களில், 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு, 15 இடங்கள் காலியாக உள்ளன.