இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
130 கோடிக்கு அதிகமான மக்களை கொண்ட இந்தியாவில் கணக்கெடுப்பது எளிதான காரியம் இல்லை. 30 லட்சம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் கணக்கிடப்படும். இது ஒரு நீண்ட நடைமுறை.
முதற்கட்டாக இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருந்தது. தற்போது கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது அத்தியாவசியப் பணி கிடையாது. இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டால் கூட, அது விளைவை ஏற்படுத்தாது. லட்சக்கணக்காக அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட்டு, வீடு வீடாக சென்று தகவலை சேகரிக்க வேண்டும் என்பதால், ஈடுபடுபவர்களின் உடல்நலம் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது ’’ என்றார்.