புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர் அங்குள்ள பல்கலைக்கழக கிளை அலுவலகத்தில் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் புஷ்பலதா (வயது25).
இவர் பி.ஏ. படித்து முடித்துவிட்டு புதுவை முருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று புஷ்பலதா காலையில் செல்போன் கடைக்கு வேலைக்கு வந்தார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் புஷ்பலதா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உமாமகேஸ்வரி செல்போன் மூலம் புஷ்பலதா வேலை பார்த்து வந்த செல்போன் கடை உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது மாலை 6 மணிக்கே வேலை முடிந்து புஷ்பலதா கடையில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்தார். புஷ்பலதாவின் செலபோன் எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து புஷ்பலதாவை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் புஷ்பலதா இல்லை. இதையடுத்து உமாமகேஸ்வரி தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து புஷ்பலதாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.