திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள வாஞ்சியூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது36). இரவது மனைவி ராஜாத்தி(31). ராஜாத்தியும், அதே பகுதியில் வசிக்கும் பிரபு மனைவி சுகன்யா என்பரும் தோழிகளாக பழகி வந்தனர். இந்நிலையில் ராஜாத்தி சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்போன் கேட்டுள்ளார். அப்போது அவர் அதில் பேலன்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பிரபு தனது உறவினர் கண்ணன் என்பவருடன் ராஜாத்தி வீட்டிற்கு சென்று அவரது கணவர் சுரேசிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனை தடுத்த அவரது கொழுந்தியாள் அருள்கொடி என்பவரையும் தாக்கியுள்ளனர்.
இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.