கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அடுத்துள்ள நாச்சி அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு வித்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பிரகாஷ் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். இதனால் தினமும் மாலை அங்குள்ள ஐயப்பன் கோவிலில் பம்பை- உடுக்கை அடித்து பாட்டு பாடுவார். நேற்று மாலையும் ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு சென்ற பிரகாஷ் பம்பை அடித்து பாட்டுபாட முயன்றார். அப்போது செல்போன் இடையூறாக இருக்கும் என்று நினைத்து அதனை கோவிலுக்குள் உள்ள ஒரு இடத்தில் வைத்தார்.
கோவிலுக்குள் செல்போன் வைத்த பின்னர் அது வெடித்து சிதறி விட்டது. குழந்தைகள் வைத்திருந்தபோது வெடித்திருந்தால் விபரீதமாகி இருக்கும். அல்லது என்னிடம் இருந்தபோது வெடித்திருந்தால் எனது குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை. நான் வணங்கும் ஐயப்பன் தான் எங்களை காப்பாற்றியுள்ளார் என்றார்.
வெடித்து சிதறிய செல்போனை எடுத்துக்கொண்டு அதனை வாங்கிய கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது செல்போனுக்கான வாரண்டி முடிந்து விட்டதாக கூறி விட்டனர்.