புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் யூரியா உர மானிய திட்டத்தை, 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தை தாண்டியும், அதாவது 2020-ம் ஆண்டுவரை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 935 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உர மானிய திட்டத்தால், போதுமான உரங்கள், விவசாயிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும், உரத்துக்கான மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் முறையை அமல்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.