புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு ஆகியவற்றின் கேள்வித்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வெளியான விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. மேற்பார்வை அதிகாரி கே.எஸ்.ரானா நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள எண் 859-வது தேர்வு மையத்தை மேற்பார்வையிட்டதில் அவர் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை செயலாளர் அனில் சுவரூப் தெரிவித்தார்.