செய்திகள்

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிறப்பு சலுகை

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற சிறப்பு சலுகையை கொண்டு வந்து மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. #CBSE

மாலை மலர்

சென்னை:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முறையில் இந்த வருடம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 6 மாதத்திற்கு ஒருமுறை பாடத் தேர்வினை நடத்தி வந்ததை மாற்றி ஒட்டு மொத்தமாக ஒருமுறை தேர்வு எழுதும் முறை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

இதுவரையில் உள்மதிப்பீடு (இண்டர்னல்) மார்க் தேர்வு 20-க்கும் எழுத்து தேர்வு முறைக்கு 80 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அதாவது 80 மதிப்பெண் கொண்ட எழுத்து தேர்வில் 33 சதவீதமாக 27 மார்க் பெற வேண்டும். இந்த ஆண்டு இரண்டையும் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி உள் மதிப்பீட்டில் 20-க்கு 20 பெற்று 80 மதிப்பெண்ணுக்கான எழுத்து தேர்வில் 13 மதிப்பெண் வங்கினாலே பாஸ் பெற்றதாகி விடும். இந்த சிறப்பு சலுகை இந்த வருடத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 5-ந்தேதி சி.பி. எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. புதிய பாடத் திட்டத்தில் முதல் தேர்வு என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. #CBSE #TamilNews