ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் 
செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் -டெல்லி சிறப்பு நீதிமன்றம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனுக்களை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மாலை மலர்

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 3-ல் உத்தரவு பிறப்பிக்கிறோம் எனவும், அதுவரை கைது செய்வதற்கான தடை நீடிக்கப்படுகிறது எனவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் பின்னர் இந்த வழக்கை பரிசீலிக்க செப்டம்பர் 5ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை இன்று பரிசீலித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.