புதுடெல்லி:
டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். முன்பு சத்யேந்தர் ஜெயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் மூலம், அவர் ரூ.4 கோடியே 63 லட்சம் அளவுக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது நேற்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இது குறித்து சத்யேந்தர் ஜெயின் தனது டுவிட்டர் பதிவில், சி.பி.ஐ. அதிகாரிகள் தனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தியதாக குறிப்பிட்டு உள்ளார்.