செய்திகள்

சென்னையில் லஞ்சம் வாங்கியதாக பொது கணக்காளர் அருண் கோயல் கைது- சி.பி.ஐ. நடவடிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்காளர் அலுவலகத்தில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி, பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 2 அதிகாரிகளை கைது செய்தனர். #cbiraids #chennaiagoffice

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்திற்கு அருகில் பொது கணக்காளர் அலுவலகம் உள்ளது. இன்று இந்த அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அலுவலகம் முழுக்க சோதனை செய்தனர். அதிகாரிகள் மீதான லஞ்ச ஊழல் புகாரையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. 

இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். காலையில் தொடங்கிய சோதனை மாலையில் நிறைவடைந்தது.

இந்த சோதனையின் நிறைவில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கணக்காளர் கஜேந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.  ரூ 5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews #cbiraids #chennaiagoffice 

SCROLL FOR NEXT