மண்ணச்சநல்லூர்:
திருச்சி பாலக்கரை காஜா பேட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன். முடி திருத்தும் தொழிலாளி. இவருக்கு பரத், ராஜேஷ(வயது10) என்ற இரு மகன்கள் இருந்தனர்.இவர்களில் ராஜேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக அன்பழகன் நேற்று தனது மகன்களுடன் முக்கொம்பு வந்திருந்தார். முக்கொம்பில் உள்ள பொழுது போக்கு அம்சங்களை பார்த்து கழித்த அவர்கள் மதியம் வாத்தலை காவிரியில் நடுக்கரையை ஒட்டி 39-ஆவது ஷட்டர் உள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் புதை மணலில் சிக்கி ஆற்றில் மூழ்கினார். அப்போது மூச்சுத் திணறி ராஜேஷ் இறந்தார். தகவலறிந்த திருச்சி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் முக்கொம்பு சென்று ராஜேஷ்சின் உடலை கைப்பற்றினர்.
இது குறித்து வாத்தலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews