செய்திகள்

காவிரி போராட்ட வியூகம் - எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். #CauveryMangementBoard #MKStalin

மாலை மலர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதவிர தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், சமூக அமைப்பினர் மற்றும் மாணவர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தி கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.