சென்னை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கமும் இணைந்து கொள்கிறது. இதற்காக, வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஐகோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அன்று எந்த ஒரு நீதிமன்றங்கங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வக்கீல்கள் ஆஜராக மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews