செய்திகள்

தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். #CauveryManagementBoard #Cauveryissue

மாலை மலர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, வழக்கு ஒன்று தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து தலைமை நீதிபதி கேட்டார்.