செய்திகள்

தா.பேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

தா.பேட்டை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தா.பேட்டை கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பாசறை முசிறி தொகுதி செயலாளர் அஸ்வின் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நாகராசு முன்னிலை வகித்தார்.  மாநில இளைஞர் பாசறை செயலாளர் துரைமுருகன்,  மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு, இளைஞர் பாசறை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.