செய்திகள்

செல்போன் திருடிய வாலிபரை தலைகீழாக தொங்க விட்டு தாக்கிய கொடூரம் - 3 பேர் கைது

பீகார் மாநிலத்தில் செல்போன் திருடிய வாலிபரை பொதுமக்கள் மத்தியில் சங்கிலியால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #bihar

பாட்னா:

பீகார் மாநிலம் தார்பங்கா மாவட்டத்தில் உள்ள கின்கோலி கிராமத்தில் செல்போன் திருடியதாக ஒரு வாலிபரை பொதுமக்கள் பிடித்துள்ளனர். அவரை சுற்றியிருந்த ஆண்கள் கொடூரமாக தாக்கினர். பின்னர் அவரை இரும்பு சங்கிலியை பயன்படுத்தி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டனர்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் வாலிபர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #bihar #tamilnews

SCROLL FOR NEXT