செய்திகள்

வில்லியனூரில் கடனுக்கு மது  கொடுக்க மறுத்ததால் கேஷியருக்கு பீர் பாட்டில் குத்து

புதுவை வில்லியனூரில் கடனுக்கு பீர் கொடுக்க மறுத்ததால் மதுக்கடை கேஷியருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

வில்லியனூர்:

ரெட்டியார் பாளையம் அஜீஸ் நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 42). இவர் வில்லியனூர் கோட்டை மேட்டில் உள்ள ஒரு மது கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு பணியில் இருந்த போது, வில்லியனூர் கோட்டை மேடு ஒத்தவாடை வீதியை சேர்ந்த அஜித் (30). மதுக்கடைக்கு வந்து கடனுக்கு பீர் கேட்டார். ஆனால், கோபால் தர மறுத்து விட்டார்.

இதில் அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கோபால் முகத்தில் குத்தினார்.

இதுகுறித்து கோபால் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலையன் வழக்குபதிவு செய்து அஜித்தை கைது செய்தார். #tamilnews