பணம் கொள்ளை 
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி.யின் பெட்ரோல் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.பி.யின் பெட்ரோல் நிலையத்தில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள போக்ரி பர்ஹாட் பகுதியில் அம்மாநில பா.ஜனதா எம்.பி. ஆர்.கே.சிங் படேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்குக்கு நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். உள்ளூர்காரர்கள் துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து பங்க் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT