கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்குட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் நட்சத்திர ஆமையை பிடித்தது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு தெங்குமரஹாடா பகுதி புதுக்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பண்டன் என்கிற சொட்டர் (வயது 42) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பண்டனுக்கு, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நட்சத்திர ஆமையை பிடித்ததற்காக 9 மாத சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் தீர்ப்பு கூறினார்.