கோப்புபடம் 
செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்கள் ஓட்டி வந்த 54 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்கள் ஓட்டி வந்த 54 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

மாலை மலர்

சேலம்:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின் போது கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி சேலம் மாநகர் முழுவதும் போலீசார் பலத்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்கள் ஓட்டி வந்த 54 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.