சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் 350 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது.
இந்த சிலை சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த சிலையின் எடை அதிகம் என்பதால், சாலைகள் சேதம் அடைகின்றன.
சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைகின்றன. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சிலையை கர்நாடகா மாநிலத்துக்கு எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.