போரூர்:
சென்னை கே.கே. நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மனைவி நர்மதா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நர்மதா, ராமாபுரம் கலசாத்தம்மன் கோவில் அருகே திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ராஜேஷ்குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜனார்த்தனன் தனது செல்போனில் இருவரையும் படம் பிடித்தார். இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தகராறில் ஈடுபட்டு ஜனார்த்தனனை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் ஜனார்த்தனன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் தாமஸன் ஜார்ஜ் விசாரணை நடத்தி, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், ஜனார்த்தனன் இருவர் மீதும் 75-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.