கோப்பு படம் 
செய்திகள்

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 8 டாக்டர்கள் மீது வழக்கு

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 8 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும் டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.

இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி திருநாவுக்கரசு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் 8 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.