கோப்பு படம் 
செய்திகள்

மதுரையில் வியாபாரியிடம் கந்துவட்டி - 8 பேர் மீது வழக்கு

மதுரையில் வியாபாரியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை நாராயணபுரத்தைச்சேர்ந்தவர் ராஜ்கண்ணன். இவர் கீழமாசி வீதியில் எண்ணைகடை நடத்தி வருகிறார். தனது தொழிலை அபிவிருத்தி செய்ய ராஜ்கண்ணன் திட்டமிட்டார். இதற்காக 8 பேரிடம் ரூ. 31 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கினார்.

இந்த நிலையில் தல்லாகுளம் போலீசில் ராஜ்கண்ணன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டேன். ஆனால் கடன் கொடுத்தவர்கள் மேலும் வட்டி கேட்டு மிரட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தல்லாகுளம் சரவணகுமார், அவரது மனைவி சுதா ராஜ்குமார், ஒத்தக்கடை சரவணன், அவரது மனைவி கார்த்திகா, கோமதிபுரம் பிச்சை, கள்ளந்திரி திருமலைராஜன், எஸ்.எஸ்.காலனி வெங்கடாசலம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.