வழக்கு 
செய்திகள்

தருமபுரி சுவரில் அனுமதியின்றி விளம்பரம் வரைந்த 4 பேர் மீது வழக்கு

தருமபுரி அரசு ஆஸ்பத்திரி சுவரில் அனுமதியின்றி விளம்பரம் வரைந்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சுற்று சுவரில் ஒருசிலர் அனுமதியின்றி விளம்பரம் செய்துள்ளனர். இதனை பார்த்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராவ் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரணை நடத்தினார்.

இதில் மருத்துவமனை சுவரில் அனுமதியின்றி விளம்பரம் செய்தது விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, குமார், முனுசாமி, விஸ்வநாதன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அனுமதியின்றி விளம்பரம் செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.