கோப்புபடம் 
செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

ஊத்துக்கோட்டை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

பெரியபாளையம் அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதியன்று செங்குன்றம் அருகே உள்ள ஜனபன்சத்திரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரேம்குமார் (28) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

பின்னர் சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை திருமணம் செய்ததாக பிரேம்குமார் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 16 வயது சிறுமியை மீட்டு, சென்னையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.