செய்திகள்

திருச்செங்கோடு அருகே 2 கார்கள் மோதி விபத்து: 5 பேர் காயம்

திருச்செங்கோடு அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்செங்கோடு:

நாமக்கல்லைச் சேர்ந்தவர் தர்மராஜ்(45). இவர் மக்காசோளம் மண்டி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது மனைவியுடன் உறவினர் ஒருவரது திருமணத்திற்காக திருச்செங்கோட்டுக்கு காரில் வந்தார்.

காரை டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது கார் திருச்செங்கோடு உஞ்சனை ஆலமரம் என்ற பகுதியில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் எதிர் பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தர்மராஜ், அவரது மனைவி, டிரைவர் காயம் அடைந்தனர்.

இதுபோல் எதிரே வந்த காரில் சங்ககிரியை சேர்ந்த பழனியப்பன் லாரி அதிபர், அவரது மனைவி ராசம்மாள் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  

காயம் அடைந்த 5 பேரை அக்கம் பக்கத்தினர் உடடினயாக மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT