காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு படையினர் பாதுகாப்பை கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.
தற்போது அவர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர் டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் கடந்த மாதம்
26-ம் தேதி பாதுகாப்பு படையினரின் காவலையும் மீறி காருடன் நுழைந்த 7 பேர் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.