கொள்ளை 
செய்திகள்

கொளத்தூரில் கார் விற்கும் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் கொள்ளை

சென்னை கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மாலை மலர்

கொளத்தூர்:

சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருபவர் முருகன் (49).

நேற்று இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்ற அவர் இன்று காலையில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் காணவில்லை.

அலுவலகத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மற்றும் 64 கார்களின் சாவிகளும் கொள்ளை போய் இருந்தன.

மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமரா மற்றும் டி.வி. களும் கொள்ளை போயிருந்தன.

இது குறித்து முருகன் ராஜமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.