செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: சப்-இன்ஸ்பெக்டர் பலி

மரத்தில் கார் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தேனி மாவட்டம், திருமலைபுதூரை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் கோபிகண்ணன் (வயது 35). இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவரது சகோதரர் திருமணம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு இன்று காலை கோபிகண்ணன் காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. உள்ளே இருந்த கோபி கண்ணன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.