விபத்து 
செய்திகள்

மாமல்லபுரத்தில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் பலி

மாமல்லபுரத்தில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் டி.கே. எம் சாலையை சேர்ந்த மோகன் (24). கல்பட்டறையில் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், அவரது நண்பர் பூஞ்சேரியை சேர்ந்த வேல்முருகனும் நேற்று காணும் பொங்கலை கொண்டாட மோட்டார் சைக்கிளில் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்றனர். அப்போது மாமல்லபுரம் அரசு மருத்துவமணை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணியின் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.