செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே கார் -பைக் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் காயம்

செய்துங்கநல்லூர் அருகே கார் - பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தினை சேர்ந்தவர் பேச்சி பாண்டியன் (வயது 62). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது தனியார் பள்ளி வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை 8 மணிக்கு நெல்லை செல்ல விட்டிலாபுரம் விலக்கில் இருந்து நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோட்டில் தனது பைக்கில் கடக்க முயன்றார்.

அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட பேச்சி பாண்டியன் பலத்த காயமடைந்தார்.

இவரை பாளைமேட்டுத்திடல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். 

இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர்  விருதுநகர் அல்லிதெருவை சேர்ந்த ராஜா ரஹீம் (45) என்பவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT