சாயல்குடி:
சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரைச் சேர்ந்தவர் குமார் (வயது 60) விவசாயி. இவர், பஸ் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து ராமேசுவரம் நோக்கி கார் சென்றது. அந்த கார் எதிர்பாராத விதமாக, குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோ கிரீம்செரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.