செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கார் மோதி பக்தர் பலி

சங்கரன்கோவில் அருகே பாதயாத்திரை சென்ற வாலிபர் மீது கார் மோதியது. இதில் சம்பவம் இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கொத்தாள வீரன் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் கோபிநாத் (வயது 19). கோபிநாத் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார்.

சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலான்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது தெற்கு அச்சம்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக கோபிநாத் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்னக்கோவிலான்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரான தெற்குஅச்சம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews