செய்திகள்

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் -கனடா பிரதமர் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது.

மேலும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது.  இதனால், மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

SCROLL FOR NEXT