செய்திகள்

கனடா ஓபன் பேட்மிண்டன்: 3-வது சுற்றில் இந்திய வீரர்கள் தோல்வி

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஆர்.கரண்ராஜன், அபிஷேக் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

மாலை மலர்

அல்பெர்டா :

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அல்பெர்டாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 -வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஆர்.கரண்ராஜன், அபிஷேக் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருத்விகா ஷிவானியும் தோல்வி கண்டு நடையை கட்டினார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்-வீராங்கனைகளின் சவால் முடிவுக்கு வந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21 -11, 21 -17 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் ராபின் டாப்லிங்-ஷெரில் செய்னென் இணையை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.