கோவை:
டிரைவர்கள் 8 மணி நேரம் மட்டும் வேலை செய்ய வேண்டும், மீறி வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் ரத்து என்ற சட்டத்தை எதிர்த்து கோவையில் இன்று கால்டாக்சி மற்றும் வாடகை வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்குள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews