செய்திகள்

கலிபோர்னியா காட்டுத்தீ பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் படுவேகமாக பரவிவரும் காட்டுத்தீக்கு 36 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 6 ஆயிரம் வீடுகள், கடைகள் நாசமடைந்தன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வடக்கேயுள்ள 8 கவுன்ட்டிகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயானது, கட்டுப்படுத்த இயலாத காட்டுத்தீ படுவேகமாக பரவி வருகிறது.

சுமார் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் மணிக்கு 50 மைல் வேகத்தில் வீசும் காற்றின் போக்குக்கேற்ப பரவிவரும் இந்த பெருந்தீ யூபா, புட்டே, நெவேடா கவுன்ட்டிகளுக்கு உட்பட்ட சமவெளி பகுதியில் உள்ள பல வீடுகளை நாசப்படுத்தி சாம்பல் ஆக்கியுள்ளது. சான்ட்டரோஸா மற்றும் நாப்பா பகுதியில் உள்ள இரு சொகுசு விடுதிகளும் தீக்கிரையாகின.

SCROLL FOR NEXT