தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை சரிசெய்து அணிகளை இணைக்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில், கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய டிடிவி தினகரன் மீண்டும் அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் செயல்படுவதால், மூன்றாவதாக ஒரு அணி உருவாகியிருப்பதாக பேசப்படுகிறது. தினகரனுக்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.