ஆனால் துணைக்கேப்டன் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா அணி விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.
இந்த தொடருக்கு கட்டாயம் துணைக் கேப்டன் தேவை. தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களாக மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பல் மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்தியா வந்து விளையாடுகிறது. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.