சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு தொடரில் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதனால் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபனில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய காஷ்யப் 12 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் அடிக்கடி காயத்தால் பல தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
சமீர் வர்மா நான்கு இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிப் பெற்ற நான்காவது வீரராவார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலிய ஓபனை அடுத்தடுத்து வென்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி 8-வது இடத்தில் உள்ளார். அஜய் ஜெயராம் 16-வது இடத்திலும், பி. சாய் பிரணீத் 19-வது இடத்திலும் உள்ளனர்.